இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீது குற்றம் சாட்டிய ஸ்ரீ ரெட்டி தமிழ், தெலுங்கில் நடித்து வரும் ஹீரோயின்களை மறைமுகமாக வம்புக்கு இழுத்திருக்கிறார்.
இன்று அவருடைய முகப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்னுடைய பட்டியல் மிகவும் நீளமானது என சிலர் நினைத்து வருகிறார்கள். அது தவறு, tris..,nay..t..a,ka..l,sa..t.. ஆகியோர் சிறந்த நடிகைகள், டாப் ஹீரோயின்கள். அவர்களுடைய பட்டியலைப் பற்றி அவர்கள் வாயைத் திறந்தால் என்னுடைய பட்டில் மிக மிகச் சிறியது.
அவர்களது நீண்ட பட்டியலைக் கேட்டால், மக்கள் இறந்து போவார்கள்,” என ஒரு பதிவிட்டுள்ளார். அதற்குப் பிறகு மூன்று மணி நேரம் கழித்து, “ஹன்சிகா, தமன்னா ஆகியோரும் பெரிய பட்டியலை வைத்துள்ளார்கள். அது படங்களைப் பற்றியது,” என மறைமுகமாகத் தாக்கியுள்ளார்.
ஸ்ரீ ரெட்டி ஏற்படுத்தும் சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் இது பற்றிய பகிர்வுகளும் அதிகரித்து வருகின்றன. அவற்றில் பல கமெண்ட்டுகள் படிக்க முடியாத அளவிற்கு ஆபாசமாகவும் இருக்கின்றன.
இந்த சர்ச்சையை யார் தடுத்து நிறுத்தப் போகிறார்களோ…..?.