சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’, படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது .
அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு போராடும் பெண் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், தர்ஷன், இளவரசு, முனீஷ்காந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
‘பெண் கிரிக்கெட் வீராங்கனையை பற்றிய முதல் திரைப்படமாக கனா உள்ளது’, என்று அருண்ராஜா கூறியுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவுக்கு நன்றி சொல்லும் விதமாக, அனைத்து கலைஞர்களுக்கும் ஓர் ‘நன்றி விழாவை’ தயாரிப்பு நிறுவனம் நேற்று இரவு ஏற்பாடு செய்தது.
இந்த படம் 2018 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.