இயக்குனர் மீது நடிகை குற்றச்சாட்டு… பின்னணி என்ன ?

manisha 0803‘நீர்ப் பறவை’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ இடம் பொருள் ஏவல்’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு, மனிஷா யாதவ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் கொடைக்கானலில் நடைபெற்ற போது அதில் கலந்து கொள்ள படத்தின் நாயகியான மனிஷா யாதவ் சென்றிருக்கிறார்.

அங்கு படத்தின் இயக்குனர் சீனு ராமசாமிக்கும், நாயகி மனிஷாவுக்கும் நடந்த சண்டை பற்றித்தான் தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

இயக்குனர் சீனு ராமசாமி தன்னிடம் அநாகரிமாக நடந்து கொண்டதாக மனிஷா குற்றம் சாட்டியுள்ளாராம்.  அந்த சண்டை அதோடு நிற்காமல் ஒரு சில நாட்களுக்கு தொடர்ந்திருக்கிறது.

கடைசியாக மனிஷாவுக்கு நடிக்கத் தெரியவில்லை என்ற காரணத்தைச் சொல்லி, அந்த படத்திலிருந்தே அவரை நீக்கி விட்டார்கள் என்கிறார்கள்.

நடிக்கத் தெரியாது என சொல்லி படத்திலிருந்து தன்னை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாத மனிஷா இந்த பிரச்சனையை சும்மா விட மாட்டேன் என கூறி வருகிறாராம்.

இது தொடர்பான பிரச்சனை பெரிதாக வெடிக்கும் என்கிறார்கள் .

‘நீர் பறவை’ படத்திலும் பிந்து மாதவி சில நாட்கள் நடித்த நிலையில்தான் அவரை மாற்றி விட்டு சுனைனாவை நாயகியாக நடிக்க வைத்தார் இயக்குனர் சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

இடம்…பொருள்…தகவல்…

Read Previous

‘நிமிர்ந்து நில்’ – புறப்பட்டாச்சு… – ஜெயம் ரவி

Read Next

‘கோச்சடையான்’ – கோலாகல இசை விழா…

Most Popular