‘நிமிர்ந்து நில்’ – புறப்பட்டாச்சு… – ஜெயம் ரவி

nimirnthu nil jayam ravi samuthrakaniஜெயம் ரவி, அமலா பால் மற்றும் பலர் நடிக்க சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் இன்று மாலை முதல் திரையரங்குகளில் வெளியாகியது.

இது தொடர்பாக ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

“ஒருத்தரோட சினிமா வாழ்க்கையில, ரொம்ப முக்கியமா நினைக்கிற ஒரு படத்தோட  வெளியீட்டுல ஏற்படற அழுத்தம் எனக்கு மட்டுமில்லை, யாருக்கு நடந்தாலுமே அது ரொம்ப கடினமானது.

இந்த மாதிரி ஒரு கடினமான சூழ்நிலையில, நடக்கிறதுலாம் கஷ்டமாவும், கஷ்டமானதே நடக்கிறதும்னு இருக்கிற நிலையை எதிர்கொள்றது எனக்குள்ள இருக்கு.

இந்த நிலையில எனக்கு துணையா இருந்த நண்பர்களுக்கும், வியாபாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கும, கூட இருக்கிற நட்சத்திரங்களுக்கும் என்னுடைய நன்றியை சொல்லிக்கிறேன்.

படத்தோட தலைப்பு ‘நிமிர்ந்து நில்’….இதோ நாம புறப்பட்டாச்சு…,” என அவரது பத்திரிகைக் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

இன்று மாலை முதல் ‘நிமிர்ந்து நில்’…

Read Next

இயக்குனர் மீது நடிகை குற்றச்சாட்டு… பின்னணி என்ன ?