இன்று மாலை முதல் ‘நிமிர்ந்து நில்’…

nimirnthu nil 0703வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் ஜெயம் ரவி, அமலாபால், ராகினி த்வேதி, சிறப்புத் தோற்றத்தில் சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் நேற்று (07 மார்ச் 2014) வெளியாவதாக இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதிப் பிரச்சனையால் இந்த படம் நேற்று வெளியாகமல் போனது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் இன்று காலை முடிவுக்கு வந்தன.

இதனால், இன்று (08 மார்ச் 2014) மாலை 6.30 மணி காட்சி முதல் இப்படம் திரையிடப்படுவதாக இப்படத்தைத் தயாரித்துள்ள வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘நிமிர்ந்து நில்’ இனி வீரமாக நடக்க ஆரம்பித்து விடும்.

Read Previous

கவிஞர் வாலியை பின்னால் தள்ளிய ‘கோச்சடையான்’ விளம்பரம்

Read Next

‘நிமிர்ந்து நில்’ – புறப்பட்டாச்சு… – ஜெயம் ரவி