மணிரத்னம் அடுத்து இயக்கப் போகும் படத்தைப் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
‘கடல்’ படத்தின் தோல்விக்குப் பிறகு ஏறக்குறைய ஒரு வருடமாக தனது அடுத்த படம் பற்றி இயக்குனர் மணிரத்னம் இதுவரை எதுவுமே சொல்லாமல் இருக்கிறார்.
ஆனாலும், படம் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தெலுங்கின் முன்னணி ஹீரோக்களான நாகார்ஜுனா, மகேஷ் பாபு ஆகியோர் ஹீரோக்களாகவும், ஐஸ்வர்யா ராய், ஸ்ருதிஹாசன் ஹீரோயின்களாகவும் நடிக்கப் போகிறார்களாம்.
இது உண்மைதான் என சமீபத்திய பேட்டி ஒன்றில் சுஹாசினி தெரிவித்துள்ளதாக ஆந்திர மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது.
மேற்சொன்ன நட்சத்திரங்களைத் தவிர இரான் அல்லது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம்.
2002ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான ‘தி போர்ன் ஐடின்டிடி’ படத்தின் கதைக் கருவை மையமாக வைத்து இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகப் போகிறதாம்.
படப்பிடிப்பு ஜுன் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது என்கிறார்கள்.
சீக்கிரமா அறிவிப்பை வெளியிட்டுடுங்க…..