சிவகார்த்திகேயன், ஹன்சிகா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘மான் கராத்தே’ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது.
துபாயில் மட்டும் ஒரு நாள் முன்னதாக இன்று வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் நடித்து இதுவரை வந்த படங்களிலேயே இந்த படத்திற்கு மிகப் பெரிய ஓபனிங் அமைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படம் கலகலப்பாக இருப்பதாகவும், ஃபேண்டஸியாகவும், ரிச்சாகவும் அமைந்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.
அனிருத் இசையில் ‘டார்லிங் டம்பக்கு…’ பாடலுக்கும் ‘ராயபுரம் பீட்டரு…’ பாடலுக்கும் தியேட்டரே அதிர்கிறது என்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகாவா என படம் ஆரம்பிக்கும் போது ஆச்சரியப்பட்டவர்கள், இருவரது ஜோடிப் பொருத்தமும் பிரமாதமாக இருக்கிறது என பொறாமைப்படுகிறார்களாம்…
ம்ம்ம்…சிவகார்த்திகேயனுக்கு மச்சம் உச்சத்துல இருக்கு போல…