“கனா கண்டேன், அயன், கோ, மாற்றான்” ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் தற்போது இயக்கி வரும் படம் ‘அனேகன்’.
தனுஷ் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் இது. தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே இப்படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது.
கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அமிரா நாயகியாக நடிக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடலாக இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது.
இப்படத்திற்காக வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணி பாடியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மற்றவர் இசையில், அதிலும் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை பவதாரிணி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘ஆத்தாடி…ஆத்தாடி…’ எனத் தொடங்கும் அந்த பாடலை பவதாரிணி பாடினால் நன்றாக இருக்கும் என இயக்குனர் ஆனந்த் அவரது கருத்தைச் சொல்ல, அதற்கு சம்மதித்த ஹாரிஸ் ஜெயராஜ், பவதாரிணியிடம் தகவல் தெரிவிக்க, அவரும் உடனே வந்து பாடிக் கொடுத்திருக்கிறார்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் மிகப் பிரம்மாண்டமாக இப்படத்தைத் தயாரித்து வருகிறது. பாண்டிச்சேரி, சென்னை, ஹைதராபாத், தெற்காசிய நாடுகளில் நடைபெற்று 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்த மாதத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறது.
விரைவில் இசை வெளியீடு நடைபெற உள்ளது.