தமிழ்த் திரையுலகின் முக்கியமான, திறமையான இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் மகேந்திரன். இன்றைக்கும் அவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
காலத்தால் அழியாத பல காவியங்களைக் கொடுத்த இயக்குனர் மகேந்திரன் இயக்கப் போகும் புதிய படத்தில் பிரகாஷ்ராஜ், சிம்ரன், பிரதாப் போத்தன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இயக்குனர் மகேந்திரன் அறிவித்தார்.
தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர்களைப் பற்றிய புதிய செய்தி மேலும் ஆவலைத் தூண்டியுள்ளது.
தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியாவையும் கடந்து ஹிந்தித் திரையுலகிலும் நல்ல நடிகராக வலம் வரும் பிரகாஷ்ராஜ், தமிழ் சினிமாவில் 90களில் நம்பர் 1 நடிகையாக புகழ் பெற்றிருந்த சிம்ரன், 80களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த பிரதாப் போத்தன் ஆகியோர் நடிக்கவிருப்பது படம் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.
சமீபத்தில் தன்னை வந்து சந்தித்த பிரகாஷ்ராஜிடம் படத்தைப் பற்றியும், அவரது கதாபாத்திரத்தைப் பற்றியும் இயக்குனர் மகேந்திரன் விவரித்துள்ளார்.
மற்ற விவரங்கள் விரைவில்…