‘குறும்பு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன்.
அடுத்து அவர் இயக்கிய ஆர்யா நடித்த ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.
அஜித் நடித்த ‘பில்லா 2007’ வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்தார்.
தொடர்ந்து ஆர்யா, த்ரிஷா நடித்த ‘சர்வம்’ படம் அவருக்கு கொஞ்சம் சரிவை ஏற்படுத்தினாலும், கடந்த ஆண்டு அஜித் நடித்து வெளிவந்த ‘ஆரம்பம்’ படம் அவருக்கு மீண்டும் ஒரு புதிய ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
தற்போது ஆர்யா, கிருஷ்ணா ஹீரோக்களாக நடிக்க ‘யாட்சன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை முடித்ததும் ஒரு ஹிந்திப் படத்தை இயக்கப் போகிறாராம் விஷ்ணுவர்தன்.
அது பற்றிய விவரங்கள் விரைவில்…