‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் பரபரப்பாக உருவாகி வந்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் கைவிடப்பட்டதாக கடந்த சில நாட்களாக சில மீடியாக்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஆனால், அதை படத்தின் தயாரிப்பாளரும் சிம்புவின் அப்பாவான டி.ராஜேந்தர் மறுத்துள்ளார்.
‘‘வாலு’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டும். அதோடு, அந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விடும்.
அதன் பின் சிம்பு – நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய 65 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள மற்ற காட்சிகள் விரைவில் படமாக்கப்படும், ” என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தேவையற்ற வதந்தியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார் டி.ராஜேந்தர்.