சிம்பு – நயன்தாரா மீண்டும் நெருக்கம்… அடடே…ஆச்சரியக்குறி…!?

 

simbu-and-nayanthara

சிம்பு நடித்து வருடத்திற்கு ஒரு படம் வருகிறதோ, இல்லையோ சிம்பு நடித்து நாளொன்றுக்கு ஒரு புகைப்படம் வரும் போல.

எந்த ஒரு ஃபோட்டோவால் சிம்புவும், நயன்தாராவும் பிரிந்தார்கள் என்று சொல்லப்பட்டதோ, மீண்டும் ஒரு ஃபோட்டோவால் சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் நெருக்கமாகி விட்டார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய த்ரிஷா, சிம்பு, நயன்தாரா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை விருந்துக்கு அழைத்திருந்தாராம்.

அப்போது நடைபெற்ற ‘பார்ட்டி’யில்தான் இருவரும் மீண்டும் நெருக்கமாகப் பழகியிருக்கிறார்கள், அல்லது சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் போதே, என்ன இது ஆச்சரியம் என புருவத்தை உயர்த்தியவர்கள் பல பேர். எவ்வளவு நாளைக்கு இது…என்ற பேச்சு கூட கோடம்பாக்கத்தில் எழுந்தது.

சொல்லி வைத்தாற் போல் இருவருக்கும் மீண்டும் சண்டை அதனால் படமே டிராப் ஆகி விட்டதெல்லாம் சொன்னார்கள்.

ஆனால், சிம்புவும், நயன்தாராவும் நெருக்கமாக உள்ள இந்த ஃபோட்டோவைப் பார்த்ததும் அதெல்லாம் ஒரு நாடகம்தான் என தெரிய வருகிறது.

நேற்று, சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் பரவிய போது, ‘என்னமா நடிக்கிறாங்கப்பா’ என பேச்சே கிளம்பியது.

வம்புவே உனது பெயர்தான் சிம்புவோ, என மீண்டும் நிரூபிக்க வைத்துள்ளது இந்த புகைப்படம்…

நல்லா இருந்தால் சரிதான்…

 

Read Previous

தம்பியை வீட்டை விட்டு விரட்டும் ஆர்யா…

Read Next

யாமிருக்க பயமே – விமர்சனம்

Most Popular