நடிகர் ஆர்யாவின் தம்பியான சத்யா, ‘புத்தகம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார்.
தற்போது ‘அமர காவியம், எட்டுத்திக்கும் மதயானை, காதல் டூ கல்யாணம்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
‘அமர காவியம்’ படத்தை ஆர்யாவே தயாரிக்கிறார். இந்த படத்தை ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்குகிறார்.
ஜீவா சங்கர் உதவி இயக்குனராக இருக்கும் போது ஆர்யாவை சந்திக்கும் போதெல்லாம் அவரது தம்பி சத்யாவை நடிக்க வைக்கச் சொல்லி கேட்பாராம்.
அப்படித்தான் சத்யாவின் மனதில் தானும் ஒரு நடிகராக வேண்டும் என்ற ஆசை உருவானதாம். ஆனாலும், தம்பிக்காக யாரிடமும் இதுவரை வாய்ப்பு கேட்டதில்லை என்கிறார். தம்பிக்காக எந்த உதவியையும் செய்ததில்லையாம். அவராகவே சினிமாவில் வளர வேண்டும் என நினைத்தாராம்.
அப்படியென்றால் ‘அமர காவியம்’ படத்தை ஆர்யா தயாரிக்க என்ன காரணம் ?
“அமர காவியம்’ படத்தின் இயக்குனரான ஜீவா சங்கர் சொன்ன கதை மிகவும் சிறப்பான கதை. அதோடு, அவர்தான் சத்யாவிடம் நடிகனகாக வேண்டும் என்ற ஆசையை விதைத்தவர். அதனால் இருவரும் சேர்ந்து நல்ல படத்தைத் தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது,” என்கிறார் ஆர்யா.
அதோடு ஆர்யா அடுத்து சொல்வதுதான் ஆச்சரியமான ஒரு விஷயம்.
“சத்யா பெரிய நடிகனாகிவிட்டால், எனக்கும் அவனுக்கும் கூட போட்டி வந்து விடும். அவன் பெரிய நடிகனாகி விட்டால், அவன் சொந்த வீடு வாங்க வேண்டும். இப்போதிருக்கும் வீட்டை விட்டு வெளியே போய் விட வேண்டும்,” என்கிறார்.
‘அமர காவியம்’ காவியம் படைத்து, அண்ணனின் ஆசையை தம்பி நிறைவேற்றட்டும்.