‘மனம் மயங்குதே’ – இது வேற மயக்கம்…

manam mayangutheகருமாரி புரொடக்ஷன்ஸ் பி.கே.முத்துக்குமார், வி. செந்தில் குமார் தயாரிப்பில், கே.வி. ராஜீவ் இயக்கத்தில் ‘ராட்டினம்’ லகுபரன், ரியா, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மனம் மயங்குதே’.

படத்தோட டைட்டில் போலவே ஹீரோ, ஹீரோயின் மேல காதல் வயப்படறதனாலதான் ‘மனம் மயங்குதே’ன்னு டைட்டில் வச்சிருக்காங்கன்னு நீங்க நினைச்சால் அது தப்பு என்கிறார் இயக்குனர் ராஜீவ்.

காதலையும் மீறிய ஒரு விஷயத்தை படத்துல யதார்த்தமா சொல்லியிருககோம். அது என்னங்கறதுதான் சஸ்பென்ஸ் என மேலும் மறக்கிறார் இயக்குனர்.

“நான் யார் கிட்டயும் இதுவரைக்கும் உதவியாளரா வேலை பார்த்ததில்லை. ஆனால், டெக்னீஷியனா 20 படங்களுக்கு மேல வேலை பார்த்திருக்கேன்.

‘மனம் மயங்குதே’ன்னு சொன்னால் பொதுவா எல்லாருடைய ஃபோகஸும் காதல் மேலதான் இருக்கும். ஆனால், அதைத் தாண்டி சில விஷயங்கள் இருக்கு. அதைத்தான் இந்த படத்துல சொல்லியிருக்கேன்.

துன்பம் வரும் வேளையில் நாம் எடுக்கும் முடிவுதான் நம் வாழ்வின் நிலையை நிர்ணயிக்கும்.

நமக்கு என்னைக்காவது ஒரு கஷ்டம் வர்றப்போ அப்ப நாம எடுக்கிற முடிவுதான் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்குது. இந்த படத்தோட ஹீரோ ஒரு ‘கொரியர்’ பையனா வேலை பார்க்கிறான். அவருக்கு ஒரு நிகழ்வு நடக்குது, அப்ப அவர் எடுக்கிற முடிவு அவரோட வாழ்க்கையை எப்படி திசை திருப்பி போட்டுடுதுங்கறதுதான் படத்தோட கதை.

எந்த வித சினிமாத்தனமும் இல்லாம படத்தை மிகவும் யதார்த்தமா பதிவு பண்ணியிருக்கோம்.

தமிழ்நாட்டுல இன்னைக்கு 5 லட்சம் இளைஞர்கள் ஒரு விஷயத்தால பாதிக்கப்பட்டிருக்காங்க.  அந்த 5 லட்சம் பேர்ல ஒருத்தராதான் இந்த படத்தோட ஹீரோ வர்றாரு.

காதலைத் தவிர வேற ஒரு விஷயம் ஹீரோவை மயங்க வைக்குது, அதான் ‘மனம் மயங்குதே,” என்கிறார் இயக்குனர் கே.வி.ராஜீவ்.

பவன் பாடல்களுக்கு இசையமைக்க, ஷியாம் மோகன் பின்னணி இசையமைக்கிறார்.

விரைவில் இசை வெளியீடும் தொடர்ந்து படமும் வெளிவர உள்ளது.

 

Read Previous

ஆவி உலகைப் பற்றிய ‘ஆ…’

Read Next

‘ஷாரூக் To சந்தானம்’ ஆஷ்னா-வின் ஆட்டோகிராப்…

Most Popular