ஆவி உலகைப் பற்றிய ‘ஆ…’

aah‘அம்புலி – 3 D’ படம் மூலம் தமிழ்த் திரை பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே டி வி ஆர் கிரியேட்டிவ் பிரேம்ஸ் நிறுவனமும், இயக்குனர்கள் ஹரி – ஹரேஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் படம் ‘ஆ’.

‘’ ஆ ‘ என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும் உணர்த்தும்.  இந்த வார்த்தையை விட  பயம் என்ற உணர்வை பலமாக வெளிப்படுத்தும் வார்த்தை வேறு எதுவும் கிடையாது,” என்கின்றனர்  இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரேஷ்.

‘ ஆ’ ஐந்து வித்தியாசமான தளத்தில் நடக்கும் திகில் கதை. ஜப்பான், துபாய், ஆந்திராவில் உள்ள ஒரு ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை, வங்கக் கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென் கோடியில்  ஒரு கிராமத்தில் உள்ள A T M,  ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு தான் ‘ஆ’.

ஆவி உலகைப் பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் பல இடங்களுக்குச் சுற்றி வர , அதில் அவர்களுக்கு ஏற்படும் பயங்கரமான அனுபவம் தான் ‘ஆ’ .

திறமையான கலைஞர்கள் என பெயர் எடுத்த ‘ அம்புலி கணேஷ், சிம்ஹா, மேக்னா, பாலா, எம் எஸ் பாஸ்கர், பாஸ்கி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

‘ஆ’ அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

 

Read Previous

‘கோச்சடையான்’ – அடுத்த திட்டம் என்ன ?

Read Next

‘மனம் மயங்குதே’ – இது வேற மயக்கம்…