‘கோச்சடையான்’ – அடுத்த திட்டம் என்ன ?

kochadaiiyaan 1004‘கோச்சடையான்’ திரைப்படம் தயாரிப்பதற்காக வங்கிகளில் பெறப்பட்ட சுமார் 40 கோடி ரூபாய் திருப்பி செலுத்தாததால்தான், அந்த படத்தின் வெளியீடு தள்ளிப் போனது என பல பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக மீடியா ஒன் குளோபல் நிறுவனம் முன்னின்று தயாரித்துக் கொடுத்தது.

மீடியா ஒன் நிறுவனம் தர வேண்டிய பழைய பாக்கியைக் கேட்டு வினியோகஸ்தர்கள் முறையிட்டதாலும், மேலும் ‘கோச்சடையான்’ படத்திற்கான விலையை அதிக அளவு நிர்ணயித்ததாலும் படம் குறிப்பிட்ட தேதியில் வெளிவராத நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதனிடையே, படத்தின் முதன்மை முதலீட்டுத் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல், அவர்களாகவே படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

அதாவது,   பிரச்சனையில் உள்ள மீடியா ஒன் நிறுவனத்தை விலக்கி விட்டு, மற்ற பிரச்சனைகளையும் சுமூகமாக முடிக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இதன் மூலம்  ‘கோச்சடையான்’ படத்தை 23ம் தேதியன்று வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

Read Previous

சிம்புவுடன் எந்த உறவும் இல்லை…நயன்தாரா அறிவிப்பு…

Read Next

ஆவி உலகைப் பற்றிய ‘ஆ…’

Most Popular