சிம்புவை வழிக்குக் கொண்டு வந்த பாண்டிராஜ்…

idhu namma aalu_00006பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி நடந்து வருகிறது.

சில வாரங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு எப்படி திடீரென ஆரம்பமானது என்பதைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்பு கொடுத்த டார்ச்சரால் ‘இது நம்ம ஆளு’ படமே வேண்டாமென பாண்டிராஜ் முடிவு செய்து அடுத்து வேறு படத்தை இயக்கும் எண்ணத்தில் புதிய கதை ஒன்றை தயார் செய்திருக்கிறார். அந்த கதையைக் கேட்ட நடிகர் சூர்யா, கதை பிரமாதமாக இருப்பதாகவும், அதை அவரது சொந்த கம்பெனியான ‘2டி’யில் தயாரிக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

அந்த படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பாதியில் நிற்கும் படங்களில் எங்கே ‘இது நம்ம ஆளு’ படமும் நின்று விடுமோ என சிம்பு தரப்பு பயந்திருக்கிறது.

சிம்பு நடிக்கும் ‘வேட்டை மன்னன், கௌதம் மேனன்’ படங்கள் இப்படித்தான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ளன.

உடனடியாக பாண்டிராஜைத் தொடர்பு கொண்டு அவருக்குத் தரவேண்டிய தொகையை செட்டில் செய்து படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாண்டிராஜும், வேறு வழியில்லாமல் இஷ்டமேயில்லாமல்தான் ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

 

Read Previous

லிங்கா – ரஜினிகாந்த் ஜோடியாக ஆங்கிலேய நடிகை…

Read Next

முத்திரை பதிக்க வரும் ‘முண்டாசுப்பட்டி’…

Most Popular