சிம்பு நடித்த படங்களிலேயே சிறந்த படம் என்று சொல்லக் கூடிய ஒரே படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இந்த படம் வெளிவந்த பிறகுதான் சிம்புவுக்கு பெண் ரசிகைகள் அதிகம் கிடைத்தார்கள்.
அதுவரை ‘தரை’ டிக்கெட் ரேஞ்சுல இருந்த சிம்புவை ‘மால்’ டிக்கெட் ரேஞ்சுக்கு உயர்த்திய படம் அது. அந்த படத்துக்கப்புறமா இயக்குனர் கௌதம் மேனனும், சிம்புவும் இணைஞ்சி ஒரு படம் ஆரம்பிச்சாங்க.
படத்துக்கு எந்த பெயரும் வைக்காமலேயே சில நாட்கள் ஷுட்டிங் நடந்தது. படத்துக்கு ஹீரோயினா மும்பையில இருந்து பல்லவி என்ற நடிகையையும் அழைத்து வந்து நடிக்க வைத்தார்கள். சூர்யாவை வைத்து கௌதம் இயக்குவதாக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் கைவிடப்பட்டதும், இந்த படத்தை வேக வேகமாக ஆரம்பித்தார் கௌதம்.
அதன் பின் கௌதமின் நிலையைப் பார்த்து அஜித் கை கொடுக்க, சிம்புவை கைவிட்டு, அஜித் பின்னால் போய்விட்டார் கௌதம். படமில்லாத நிலையில் கௌதமுக்கு, சிம்பு கை கொடுத்து உதவி செய்ய, இப்போது அவர் சிம்புவை கைவிட்டதை சிம்பு வட்டாரங்கள் எளிதில் எடுத்துக் கொள்ளவில்லையாம்.
விரைவில் சிம்புவுக்கும், கௌதமுக்கும் பிரச்சனை வெடிக்கலாம் என்கிறார்கள்.