சிகாமணிக்கு சிக்கல் கொடுக்கும் சித்த வைத்தியர்கள்…

ATMSVS_00005பரத், நந்திதா நடிக்கும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்திற்கு சித்த வைத்தியர்கள் சிக்கல் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் ஒரு நகைச்சுவைப் படம் என்றும், படத்தில் யாரையும் கிண்டல் செய்யவில்லை என படத்தின் இயக்குனர் சொன்னாலும், அதை சித்த வைத்தியர்கள் நம்பத் தயாராக இல்லையாம்.

பாரம்பரிய வைத்தியமான சித்த வைத்தியத்தை, சேலத்தில் உள்ள பிரபல மருத்துவர் ஏழு தலைமுறைகளைக் கடந்தும் வைத்தியம் பார்த்து வருகிறாராம். அவர்களைக் கிண்டலடிப்பது போல படம் இருப்பதாக சேலத்து மக்கள் மட்டுமல்ல பலரும் பேசி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள பல தொலைக்காட்சிகளிலும் சித்த வைத்தியம் பற்றிய அவர்களது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதனால், அந்த ‘தலைமுறை’ குடும்பத்தைப் பற்றி தெரியாதவர்கள் யாருமே  இருக்க முடியாது.

ஏற்கெனவே ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் ஜெய் அப்பாவின் கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா லட்சுமணன், அந்த சேலத்து வைத்தியரின் தோற்றத்தில் நடித்து அந்த வைத்தியத்தையே கேவலப்படுத்தினர்.

இப்போது, மீண்டும் சித்த வைத்தியர்களைப் பற்றி ஒரு நகைச்சுவைப் படம் வர உள்ளது சித்த வைத்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.

 

Read Previous

இளையராஜாவை அறிமுகப்படுத்தியதுதான் எனக்கு பெருமை – பஞ்சு அருணாச்சலம்

Read Next

சிம்பு – கௌதம் மேனன் படம் டிராப் ?

Most Popular