சமந்தா – பிரணீதா : தெலுங்கில் புதிய நட்பு ஜோடி…

 

samantha,  pranitha , neeraj kona
Neeraja Kona – Samantha – Pranitha 

நடிகைகள் சமந்தா, பிரணீதா இருவரின் நட்புப் பற்றித்தான் இப்போது தெலுங்குத் திரையுலகில் பேச்சாக இருக்கிறது.

தெலுங்கு திரையுலகத்தைப் பொறுத்தவரை சமந்தாதான் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். அவர் நடித்து வெளிவரும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. அவரின் சமீபத்திய வெற்றி ‘மனம்’ திரைப்படம். இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சமந்தாவைத் தேடித்தான் ஓடுகிறார்களாம்.

தமிழில் அருள்நிதியுடன் ‘உதயன்’, கார்த்தியுடன் ‘சகுனி’, படங்களில் ஜோடியாக நடித்தவர் பிரணீதா. இரண்டு படங்களுமே வெற்றிப் படங்களாக அமையாததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு சமந்தா ஹீரோயினாக நடித்த ‘அத்தாரின்டிக்கி தரேதி’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தார். அப்போது சமந்தாவும், பிரணீதாவும் நெருக்கமான தோழிகளாகி விட்டார்களாம்.

தற்போது பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லாத பிரணீதாவுக்கு, சமந்தாவே இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் வாய்ப்பு கேட்டு நடிக்க வைத்து வருகிறாராம். இதன் பலனாக ஜுனியர் என்டிஆர் ஜோடியாக சமந்தா நடிக்கும் ‘ரபாஷா’ படத்தில் பிரணீதாதான் இரண்டாவது ஹீரோயின். இந்த படத்தோடு மேலும் இரு படங்களிலும் பிரணீதாவுக்கு சமந்தாவே வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

இந்தக் காலத்தில் இரண்டு ஹீரோயின்களுக்கு இடையில் இப்படி ஒரு ‘நட்பு’ ஆச்சரியமாக உள்ளது, ஆந்திர தேசமே ஆச்சரியத்துடன் பார்க்கிறதாம்.

 

Read Previous

சிம்பு – கௌதம் மேனன் படம் டிராப் ?

Read Next

‘நான்தான் பாலா’ – வேற மாதிரி வரும் விவேக்…