நடிகை ஸ்ருதி ஹாசன் மும்பையில் புதிதாக ஒரு அபார்ட்மென்ட்டை வாங்கி அதில் குடிபுகுந்திருக்கிறார்.
பிரிந்து வாழும் கமல்ஹாசன் – சரிகா தம்பதியரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மும்மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அவரது பெற்றோர்கள் பிரிந்து வாழ்வதால், இவர் யாருடனும் தங்காமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். இதுநாள் வரை மும்பையில் வாடகை வீட்டில் குடியிருந்தவர் தற்போது சொந்தமாகவே ஒரு வீட்டை வாங்கியிருக்கிறார்.
இதற்கு முன் குடியிருந்த வீட்டில் ஒருவர் அத்துமீறி நுழைந்து காவல் துறை வரை ஸ்ருதி புகார் கொடுத்ததெல்லாம் நடந்தது. அதனால் இந்த வீட்டில் பல பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளதாம். அவருடைய விருப்பத்திற்கிணங்க பல இன்டீரியர் அழகையும் செய்திருக்கிறாராம் ஸ்ருதி.
இதனிடையே மும்பை மீடியாக்களில் ஸ்ருதி வீட்டிற்கான வங்கிக் கடனில் செலுத்த வேண்டிய தொகைக்காக அவர் கொடுத்த காசோலை திரும்பி விட்டதாகவும், அதனால் கமல்ஹாசன், ஸ்ருதி கட்ட வேண்டிய தொகையை கட்டினார் என்றும் செய்திகள் வந்துள்ன.
ஸ்ருதிஹாசன் பற்றி எப்போதும் சர்ச்சை செய்திகளையே வட இந்திய மீடியாக்கள் வெளியிடுவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன.