யாருடனும் காதல் இல்லை – தமன்னா

actress tamannaதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தியில் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் ‘ஹம்சகல்ஸ்’.

இந்த படத்தின் இயக்குனரான சஜித் கான் படத்தல் நடித்துள்ள பிபாஷா பாசு, இஷா போன்ற நடிகைகளை விட தமன்னாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

சஜித் கானும், தமன்னாவும் நெருக்கமாகப் பழகுகிறார்கள் என பாலிவுட் மீடியாக்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதி வருகின்றன. சஜித் கான் இதற்கு முன் இயக்கிய இந்திப் படமான ‘ஹிம்மத்வாலா’ மூலமாகத்தான் தமன்னா இந்தித் திரையுகில் அறிமுகமானார்.

இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில்  தமன்னா  கூறியதாவது,

“எனக்கும் சஜித்கானுக்கும் இடையே இருப்பது பாசம் மட்டும்தான். அவர் என்னுடைய சகோதரர் மாதிரி. மற்றவர்களை படத்தில் எப்படி நடத்தினாரோ அப்படியேதான் என்னையும் நடத்தினார். எனக்கென தனிப்பட்ட விதத்தில் எந்த முக்கியத்துவமும் அவர் கொடுக்கவில்லை,” என்கிறார்.

இதற்கு முன் தமிழிலும் கூட முன்னணி நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டவர்தான் தமன்னா.

 

Read Previous

கலைஞைரைச் சந்தித்த ‘நால்வர்’ கூட்டணி…

Read Next

புதிய வீட்டில் ஸ்ருதிஹாசன்…