அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுப்பேன் – மு.களஞ்சியம் ஆவேசம்…

Anjali - Director Mu.Kalanjiam
Anjali – Director Mu.Kalanjiam

சமீபத்தில் ‘களவு தொழிற்சாலை’ படத்திற்காக டப்பிங் பேச வந்திருந்த மு.களஞ்சியத்திடம் பேசினோம்…

“நான் இயக்கிய ‘பூமணி’ படத்தை மராத்தியில் அதுல்குல்கர்ணியை வைத்து இயக்க உள்ளேன். அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருகிறது.

இந்த ‘களவு தொழிற்சாலை’ படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். கார்த்திகேயன் என்ற புதியவர் இயக்கும் ‘கோடை மழை’ என்ற படத்தில் வெள்ளைத்துறை என்ற என்கவுண்டர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்,” என்றார்.

அவரை இடைமறித்து அது சரி நீங்கள் ஹீரோவாக அஞ்சலி ஹீரோயினாக நடிக்கும் உங்களது “ஊர் சுற்றி புராணம்” என்ன ஆச்சு? என்று கேட்டோம்.

“இந்த பேர் வெச்சதாலோ என்னவோ, அஞ்சலியைத் தேடி ஊர் ஊராக சுத்திக்கிட்டுருக்கேன்.

போன வருஷம் மார்ச் மாதம் 12 நாட்கள் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில் நடித்தார்.அதற்குப் பிறகு அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டார். நானும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர், கில்டு, பெப்சி, இயக்குனர் சங்கம் என்று புகார் கொடுத்தேன் விடிவுகாலம் வரவில்லை.

தெலுங்கு, கன்னடம் என்று அஞ்சலி நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தை மட்டும் தவிர்க்கிறார்.

இப்போது மீண்டு தமிழில் நடிக்க இருப்பதாக செய்திகள் வருகிறது. அப்படி நடிப்பதாக இருந்தால் என் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து நடித்து விட்டு மற்ற படங்களில் நடிக்கலாம்.

இது பற்றி எல்லா சங்கங்களுக்கும் என் பிரச்சனைகளையும், பணம் முடங்கிக் கிடக்கிற விஷயங்களையும் விளக்கமாக எழுதிக் கொடுத்திருக்கிறேன். முடிவு தெரியவில்லை என்றால் அஞ்சலி நடிக்கிற எந்த படமும் எந்த மொழியிலும் வெளியாக முடியாதபடி நீதிமன்றம் சென்று தடையுத்தரவு வாங்க வேண்டியிருக்கும். எனக்கு வேறு வழி தெரியவில்ல,” என்று ஆதங்கத்துடன் கூறினார் மு.களஞ்சியம்.

 

Read Previous

புதிய வீட்டில் ஸ்ருதிஹாசன்…

Read Next

நான் நடிக்க ரெடி…அழைப்பு விடுக்கும் அஞ்சலி…