‘எவன்’ – புலமைப்பித்தன் பேரன் நாயகனாக அறிமுகம்…

Yevan_00022எண்ணற்ற எம்ஜிஆர் பாடல்கள், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு பல ஹிட் பாடல்களை எழுதிய புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி ‘எவன்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தை கே.எம். துரைமுருகன் இயக்குகிறார் . இவர் ’தயா, போஸ், கருப்பசாமி குத்தகைதாரர், கோலி சோடா’ ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். சசிதரன் இசையில் புலமைப்பித்தன், விவேகா பாடல்களை எழுதுகிறார்கள். தீப்தி மானே நாயகியாக நடிக்கிறார். பிரபல பின்னணிப் பாடகி உஜ்ஜைனி ராய் நாயகனுக்கு அம்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது,

“செங்கல்பட்டு நகரப் பின்னணியில் இப்படம் உருவாகிறது. நாயகன் ஒரு பிரச்சனையில் சிக்கித் தவிக்க அந்த பிரச்சனைக்குக் காரணமாக யார் இருக்கிறார்கள் என்பதே ‘எவன்’. வழக்கமாக காதலனும், காதலியும் சேர்வதற்குத்தான் பெரிய போராட்டமே நடைபெறும். ஆனால், இந்த படத்தில் ஒரு தாயும், மகனும் சேர்வதற்குக் காதலி படும் கஷ்டங்கள்தான் படத்தின் கதை.

இப்படத்தின் மொத்தம் மூன்று வில்லன்கள் அறிமுகமாகிறார்கள். இப்படத்திற்காக நானா படேகர், நந்திதா தாஸ் ஆகியோரை நடிக்க வைக்க முயற்சித்தேன் முடியவில்லை. அதனால், அவர்களுக்குப் பதிலாக பொருத்தமான வேறு சிலரை நடிக்க வைத்துள்ளேன். அவர்களும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள்.

தாயின் பாசத்தை உணர்த்தும் அருமையான பாடல் ஒன்று படத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலைக் கேட்டவர்கள், தேசிய விருது பெறுவதற்கான முழு தகுதியும் இந்த பாடலுக்கு உண்டு என்கிறார்கள்.

படத்தின் நாயகனாக திலீபன் ஒரு பைக் ரேஸர். பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். இந்த படத்திற்காக பல ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்தியுள்ளார்.

காதலர்களுக்கு மட்டுமல்லாமல், அம்மாவைப் பிடிக்கிற எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும், ” என்கிறார் இயக்குனர் துரை முருகன்.

Read Previous

சூர்யா – வெங்கட் பிரபு இணையும் ‘பூச்சாண்டி’…

Read Next

உத்தம வில்லன் – ‘பார்வதி’ பெயர்க் குழப்பம்…

Most Popular