ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் ‘உத்தம வில்லன்’. இந்த படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக ஆன்ட்ரியா, பூஜா குமார் நடிக்கிறார்கள்.
இவர்களோடு படத்தில் இரு பார்வதி நடிக்கிறார்கள். ஒருவர் பார்வதி மேனன், மற்றவர் பார்வதி நாயர். பார்வதி மேனன் இதற்கு முன் ‘பூ, மரியான்‘ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். பார்வதி நாயர் இப்போதுதான் தமிழில் அறிமுகமாகிறார்.
‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பில் இவர்களிருவரையும் பெயரிட்டு அழைப்பதில் ஒரே குழப்பம் ஏற்பட்டதாம். அதன் பின் படத்தின் இயக்குனரான ரமேஷ் அரவிந்த், அவர்களை ‘பார்வதி’ என அழைக்காமல், ‘நாயர், மேனன்’ என அழைத்து வித்தியாசப்படுத்துகிறாராம்.
சாதி மறுப்பு நாயகன் நடிக்கும் படத்தில் ‘சாதி’ பெயரை சொல்லி இயக்குனர் அழைப்பதை படக்குழுவினர் ஆச்சரியமாகப் பார்க்கிறார்களாம்.
பார்வதி மேனன் ஏற்கெனவே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி விட்டதால், பார்வதி நாயகர் ‘உத்தம வில்லன்’ படம் வெளியாகும் போது பெயரை மாற்றிக் கொள்ளலாமா என யோசித்து வருகிறாராம்.