சூர்யா – வெங்கட் பிரபு இணையும் ‘பூச்சாண்டி’…

Surya - Venkat Prabhu Movie Pooja_00036வெங்கட் பிரபு – சூர்யா முதன் முறையாக இணையும்  படத்திற்கு ‘பூச்சாண்டி’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெங்கட் பிரபு, கார்த்தியை வைத்து ‘பிரியாணி’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே சூர்யாவின் ‘குட்-புக்’கில் இடம் பிடித்து விட்டார். அதன் பலனாக தன்னை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபுவுக்குக் கொடுத்திருக்கிறார்.

இந்த படத்திற்கு வழக்கம் போல யுவன்ஷங்கர் ராஜாதான் இசையமைக்கிறார். சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கலாம் எனத் தெரிகிறது.

கடந்த சில மாதங்களாகவே கதையை மெருகேற்றும் வேலையில் வெங்கட் பிரபு ஈடுபட்டிருந்தார். இன்னும் சில வாரங்களில் சூர்யா நடித்து வரும ‘அஞ்சான்’ படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அதன் பின் ‘பூச்சாண்டி’ படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

இந்த படம் ஒரு ஜாலியான பேய்ப்படமாக இருக்கும் என்கிறார்கள்.

 

Read Previous

‘கோச்சடையான்’ – ‘மஞ்சப் பை’ ஒப்பீடு…ரஜினி ரசிகர்கள் கோபம்…

Read Next

‘எவன்’ – புலமைப்பித்தன் பேரன் நாயகனாக அறிமுகம்…