கமல்ஹாசனை அவமானப்படுத்திய சந்தானம்…

kamalhaasan at vaaliba raja‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்குப் பிறகு சேது, சந்தானம், விசாகா சிங் மீண்டும் இணைந்து நடிக்கும் ‘வாலிப ராஜா’ படத்தின் இசை வெளியீடு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.

நடிகர் கமல்ஹாசன் விழாவில் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். ஆனால், அந்த விழாவில் சந்தானம் கலந்து கொள்ளவில்லை. அவர் ஹைதராபாத்தில் ரஜினிகாந்துடன் ‘லிங்கா’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இதனிடையே கமல்ஹாசனை இந்த விழாவிற்கு வரவேண்டும் என்று நேரடியாக அழைத்ததே சந்தானம்தான் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கமல்ஹாசனை அழைத்து விட்டு சந்தானம் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். இது, கமல்ஹாசனை கோபப்படுத்தியுள்ளதாம்.

அவரே, ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு சொன்னபடி விழாவிற்கு வந்திருக்கிறார். சந்தானம் நினைத்திருந்தால் ஹைதராபத்திலிருந்து மாலை கிளம்பி வந்திருந்தால் கூட விழாவில் கலந்து கொண்டிருக்க முடியும். அப்படியிருக்க அவர் வராமல் போனது இப்போது சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது.

 

Read Previous

அதிதி – விமர்சனம்

Read Next

‘ஐ’ படத்தின் கதை என்ன ?

Most Popular