ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மிகப் பெரும் பெருட்செலவில் கடந்த ஒன்றரை வருடங்களாக தயாரித்து வரும் படம் ‘ஐ’.
இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் என்பது இருக்கும், அது இந்த படத்திலும் உண்டு. அதே சமயம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அதாவது ‘ஜென்டில்மேன், இந்தியன், சிவாஜி’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘ஐ’ படத்தில் ஊழல் முக்கிய பங்கு வகிக்கிறதாம்.
படத்தின் கதை உடல் நலனைப் பற்றியது என்கிறார்கள். அதாவது பாக்சரான விக்ரம், உடல் நலனுக்காக எடுத்துக் கொள்ளும் சில விஷயங்கள் அவரை மிகவும் மெல்லியவராக மாற்றி விடுகின்றன. பின்னர், அவற்றிலிருந்து அவர் எப்படி மீண்டு எழுந்து பாக்சராக ஜொலிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
ஷங்கர் படத்தைப் பொறுத்தவரையில் அவராக வாய் திறந்து சொன்னால்தான் உண்டு. அதுவரை புகைப்படங்கள் வெளிவருதைக் கூட மிகுந்த கட்டுப்பாடுடன் காத்து வைப்பார். அப்படியிருக்க இந்தக் கதை எந்த அளவுக்கு உண்மை என்பது போகப் போகத்தான் தெரியும்.