சமந்தா சம்பளம் 2 கோடியா ?

samantha 0107தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் சமந்தாவின் தற்போதைய சம்பளம் 2 கோடி என தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.

பிரபல தயாரிப்பாளரான பெல்லம்கொண்டா சீனிவாஸ் மகன் சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘அல்லுடு சீனு’ படத்தில் நடித்தற்காக 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன. அவர் புதுமுகம் என்பதால் சமந்தா அவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கினார் என்றார்கள்.

ஆனால், சமந்தா இதை மறுத்துள்ளார். “நீங்கள் எழுதுவதைப் போல் தயாரிப்பாளர்கள்  எனக்கு 2 கோடி ரூபாய் கொடுத்தால் மகிழ்ச்சிதான். ‘அல்லுடு சீனு’ படத்திற்காக சம்பளத்தை உயர்த்தவும் இல்லை, கூடுதலாக வாங்கவும் இல்லை. தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் எனது அக்கறையில் பங்கெடுத்துக் கொள்பவர், பணத்தை விட அவருடைய பங்களிப்பு  சிறப்பானது,” என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

‘ஐ’ படத்தின் கதை என்ன ?

Read Next

காதல் செய்தியை மறுக்கிறார் ப்ரியாமணி…

Most Popular