ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் தங்களது ரசிகர்களை அழைத்து வந்து பந்தா செய்வதை வழக்கமாக்கி விட்டார்கள். சமீபத்தில் அறிமுகமாகிய ஹீரோக்கள் முதல் முதன் முதலாக அறிமுகமாகும் ஹீரோக்கள் வரை இதுதான் இப்போதைய ஃபேஷன் ஆகிவிட்டது.
சூர்யா, சமந்தா நடித்து லிங்குசாமி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘அஞ்சான்’ படத்தின் இசை வெளியீட்டை 22ம் தேதி சூர்யா ரசிகர்களை வரவழைத்து மிகப் பிரம்மாண்டமான இசை வெளியீடாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக சென்னை , நேரு உள் விளையாட்டரங்கம், நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாம். அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்ததையடுத்து, விழாவை சத்யம் திரையரங்கிற்கு மாற்றியுள்ளார்கள். ஆனால், ரசிகர்களை அழைத்து விழா நடத்துவதற்கு சத்யம் நிர்வாகமும் சம்மதிக்கவில்லையாம்.
கடந்த சில படங்களில் அதிக ரசிகர்கள் திரண்டதால் தியேட்டருக்குள் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், சூர்யா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த ‘அஞ்சான்’ இசை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. நேரடியாக கடைகளில் அஞ்சான் சிடிக்கள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளார்கள்.
விழா நடைபெறாததால் சூர்யா ரசிகர்கள் கோபமாக உள்ளதாகத் தெரிகிறது. ‘அஞ்சான்’ டீசர் யு டீயுப்பில் அதிகமாக ஹிட்டாகியது என்பதற்கே ஆர்ப்பாட்டமாக விழா நடத்தியவர்கள், இப்படி இசை விழாவை நடத்தால் விடுகிறார்களே என வருத்தப்படுகிறார்கள்.
ஆனால், விழா ரத்தானதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘அஞ்சான்’ என்பதன் பெயரும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.
‘அரசியல்’ பேசுவது நமது வழக்கமல்ல என்பதால், வாசகர்களின் எண்ணத்திற்கே இதை விட்டுவிடுகிறோம்.