நடந்து சென்ற நடிகரை நிறுத்தி அழைத்த அஜித்…

ajith-and-thambi-ramaiah‘மனு நீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கிய தம்பி ராமையா பல வருடங்களாக வடிவேலுவின் நகைச்சுவைக் கூட்டணியில் இணைந்து பின்னணியில் பணியாற்றியவர். வடிவேலு நம்மை சிரிக்க வைத்த பல காட்சிகளுக்குப் பின்னணியாக இருந்தவர்களில் தம்பி ராமையாவும் ஒருவர்.

‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படத்தின் தோல்வி இருவரையும் பிரித்து விட்டது. அதன் பின் முழு நேர நடிகரானார் தம்பி ராமையா. ‘மைனா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். சமீப காலமாக அவருடைய நடிப்பைப் பார்த்து பாராட்டாத நடிகர்களே இல்லையாம். ரஜினிகாந்த் முதல் தனுஷ் வரை பலரும் அவரைப் பாராட்டி வருகிறார்களாம்.

சமீபத்தில் வெளிவந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திலும் தம்பி ராமையாவின் நடிப்பு பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது. அடுத்து உதயநிதி ஸ்டாலினுடன் ‘இதயம் முரளி’ என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.

சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றிருந்த தம்பி ராமையா அப்போது காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென ஒரு கார் சர்ரென்று பிரேக் போட்டு நின்றதாம். கதவைத் திறந்து அஜித் இறங்கி ஓடி வந்தாராம். என்ன சார், இந்த நேரத்துல இங்கே…யாராச்சும் உங்களை விட்டுட்டுப் போயிட்டாங்களா..நான் ட்ராப் பண்ணவா…வாங்க போகலாம் என அழைத்திருக்கிறார்.

அதற்குப் பதிலளித்த தம்பி ராமையா, “நானே இந்த வயசுல உடம்பை நல்லா வச்சிக்கணும்னு வாக்கிங் போயிட்டிருக்கேன். நீங்க இப்படி எளிமையா வந்து திடீர்னு கூப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வந்துடப் போகுது தம்பி” என பதிலளித்திருக்கிறார்.

அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த அஜித், தம்பி ராமையாவை கட்டிப் பிடிச்சி பாராட்விட்டுப் போனராம்.

அஜித் ஏன் இவ்வளவு உச்சத்தில் இருக்கிறார் என்பது இப்போது புரிகிறதா….

Read Previous

உதயநிதியை வம்புக்கிழுக்கும் சந்தானம்…

Read Next

இன்றைய ரிலீஸ் – 6 படங்கள்…

Most Popular