இன்று செப்டம்பர் 5, 2014 – வெள்ளி – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
அமர காவியம்
தி ஷோ பியுப்பிள், விக்னேஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜீவா சங்கர் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைத்துள்ள படம். சத்யா, மியா ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பொறியாளன்
இயக்குனர் வெற்றி மாறன் வழங்க, ஏஸ் மாஸ் மீடியாஸ் தயாரிப்பில் தாணு குமார் இயக்கத்தில், எம்.எஸ். ஜோன்ஸ் இசையமைப்பில் ஹரீஷ் கல்யாண், ஆனந்தி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
பட்டைய கௌப்பணும் பாண்டியா
முத்தியாரா பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் எஸ்.பி.ராஜகுமார் இயக்கத்தில் அருள் தேவ் இசையமைப்பில் விதார்த், மனிஷா யாதவ், சூரி மற்றும் பலர் நடித்துள்ள படம்.
காதலைத் தவிர வேறொன்றுமில்லை
சென் மூவீஸ் தயாரிப்பில் செல்வபாரதி குமாரசாமி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் யுவன், சரண்யா மோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
வலியுடன் ஒரு காதல்
மாதாஸ் பிளஸ்ஸிங் ஸ்டுடியோ தயாரிப்பில் சி.எம்.சஞ்ஜீவன் இயக்கத்தில் து.மு.செல்வாஹ் இசையமைப்பில் ராஜேஷ், கௌரி நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ள படம்.
இந்தப் படங்களைத் தவிர ‘கள்ளச் சாவி’ என்றொரு படமும் இன்று வெளியாகிறது.




