உதயநிதியை வம்புக்கிழுக்கும் சந்தானம்…

nanbenda shooting spotவெற்றிப் படங்கள் சிலவற்றை வெளியிட்டு, பின்னர் தயாரிப்பாளராக மாறி பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து படங்களை தயாரித்த உதயநிதி ஸ்டாலின் பின்னர் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் நாயகனாகவும் அறிமுகமானார்.

ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு நகைச்சுவை நடிகர் சந்தானமும் ஒரு காரணம். அந்தப் படத்தில் ஏறக்குறைய இரண்டாவது நாயகன் போலவே படம் முழுவதும் நடித்திருந்தார் சந்தானம்.

அதைத் தொடர்ந்து உதயநிதி அடுத்து நாயகனாக நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் சந்தானத்தை தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தாலும், சந்தானத்தை மட்டும் அவர் விடவில்லை. தற்போது நடித்து வரும் ‘நண்பேன்டா’ படத்திலும் உதயநிதியுடன் சேர்ந்திருக்கிறார் சந்தானம். வழக்கமாக நாயகனின் நண்பர்கள்தான் நாயகனின் காதலுக்கு உதவி செய்வார்கள். இந்தப் படத்தில் வித்தியாசமாக சந்தானத்தின் காதலுக்கு உதயநிதி உதவி செய்கிறாராம்.

இப்படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே சில வாரங்களுக்கு முன் உதயநிதி, நயன்தாரா பற்றிய வதந்தி ஒன்று தீயாகப் பரவியது. அந்த வதந்தியைப் பற்றி நயன்தாரா கூட அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லையாம். ஆனால், சந்தானம்தான் உதயநிதியை தொடர்ந்து வம்புக்கு இழுத்துக் கொண்டேயிருக்கிறாராம்.

இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் உதயநிதி கூறியிருப்பதாவது, “இந்த வதந்தியைப் பற்றி நயன்தாரா, திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாங்களான்னு சிரிச்சிக்கிட்டே கேட்டாங்க. என் மனைவி கிருத்திகாவும், நயன்தாராவும் பிரண்ட்ஸ். அதனால இதைப் பத்திலாம் கிருத்திகா கண்டுக்கவேயில்லை.

ஆனா, சந்தானம்தான், ஓட்டு ஓட்டுனு ஓட்டிக்கிட்ருக்காரு. ‘ஏன் பிரதர், நயன்தாராவுக்கு லண்டன்லலாம் வீடு வாங்கித் தந்திருக்கீங்க. எனக்கு அவ்வளவு தூரம்லாம் வேணாம், பக்கத்துல பல்லாவரத்துல ஒரு வீடு வாங்கித் தாங்கேளேன்னு, வம்பிழுத்துக்கிட்டே இருக்கார், ” என உதயநிதி சொல்லியிருக்கிறார்.

அதனால், அடுத்த படத்தில் நயன்தாராவையும் கூடவே சேர்த்து சந்தானத்தையும் கைகழுவி விட்டாராம் உதயநிதி. அடுத்து உதயநிதி, அகமது இயக்கத்தில் நடிக்க உள்ள ‘இதயம் முரளி’ படத்தில் சந்தானத்திற்குப் பதிலாக புதிய கூட்டணியாக தம்பி ராமையா நடிக்க உள்ளாராம்.

Read Previous

ராகவா லாரன்ஸ்-ன் ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’…

Read Next

நடந்து சென்ற நடிகரை நிறுத்தி அழைத்த அஜித்…