“முனி, முனி – 2 காஞ்சனா” என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த ராகவா லாரன்ஸ் ‘முனி – 3 கங்கா’ படத்தை டிசம்பர் மாதம் வெளியிட உள்ளார்.
இந்த படத்தைத் தொடர்ந்து ராகவேந்திரா புரொடக்ஷன் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ என இரண்டு படங்களைக் கொடுக்க உள்ளார். அதில் ஒரு படத்திற்கு ‘கிழவன்’, என்றும் மற்றொரு படத்திற்கு ‘கருப்பு துரை’ என்று பெயரிட்டுள்ளார். இடைவேளை வரை ஒரு படம் , இடைவேளைக்குப் பிறகு இன்னொரு படம் என்று புதிய கோணத்தை உருவாக்க இருக்கிறார் .
பேய் படங்கள் என்றாலே திகில் மட்டும் தான் இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றி திகிலுடன் காமெடியையும் கலந்து கொடுத்து அனைவரையும் ரசிக்க வைக்கும் புதிய பார்முலாவை ‘முனி’ படம் மூலம் அறிமுகப்படுத்தினார்.
இவரது பாணியை இன்று பல இயக்குனர்கள் கையிலெடுத்திருக்கிறார்கள். இப்போது ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ மூலம் இன்னொரு பாணியை அறிமுகம் செய்கிறார். இரண்டு படங்களையும் இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார் லாரன்ஸ்.
‘கருப்பு துரை’ படத்தின் கதாநாயகியாக ராய் லட்சுமி நடிக்க உள்ளார். ‘கிழவன்’ படத்தில் நாயகியாக நடிக்க ஆன்ட்ரியாவிடம் பேசி வருகிறார்களாம்.
இதுவரை பாடல்கள் மட்டும் எழுதிய விவேகா இந்தப் படங்களில் பாடல்களுடன் வசனத்தையும் எழுதுகிறார். இசையமைப்பாளர்கள் இருவரில் ஒருவர் லியோன் ..இன்னொருவர் புதியவர்.
நட்சத்திரத் தேர்வு முடிந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.