இறந்த ரசிகர் குடும்பத்திற்கு விஜய் 3 லட்சம் உதவி…

vijay help to the kerala fanதீபாவளி அன்று விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் கேரளாவில் வெளியான போது, அவருடைய கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய முயன்ற உன்னி கிருஷ்ணன் என்ற ரசிகர் தவறி விழுந்து மரணமடைந்தார்.

‘கத்தி’ படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாட, விஜய் இன்று சென்னையிலிருந்து கிளம்பி கோயம்புத்தூருக்குச் சென்றார்.

இன்று கோயம்புத்தூருக்கு, மரணமடைந்த உன்னி கிருஷ்ணன் குடும்பத்தினரை அழைத்த விஜய், அவர்களுக்கு 3 லட்ச ரூபாய் நிதி உதவி செய்திருக்கிறார். அது மட்டுமல்ல அந்தக் குடும்பத்தினரிடம் எதிர் காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், நான் இருக்கிறேன், என கண் கலங்கி ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார்.

விஜய்யுடன் ‘கத்தி’ படத்தின் கேரள வினியோகஸ்தர் ஷிபு தமீன்ஸ் மற்றும் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்களும் அப்போது உடனிருந்தனர். ரசிகர் மன்றம் சார்பாகவும் இறந்த ரசிகருக்கு நிதி உதவி திரட்டப்பட்டு வருகிறதாம்.

கேரள வினியோகஸ்தரும் உன்னி கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளாராம்.

 

Read Previous

‘லிங்கா’ – நவம்பர் 9ல் இசை, டிரைலர் வெளியீடு…

Read Next

‘வ.வா.ச.’ கூட்டணியின் ‘ரஜினி முருகன்’ ஆரம்பம்…

Most Popular