‘லிங்கா’ – நவம்பர் 9ல் இசை, டிரைலர் வெளியீடு…

lingaa audio launch newsதமிழ்த் திரையுலகின் அடுத்த பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றான ரஜினிகாந்த் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீடு நவம்பர் மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.எஸ்.ரவிகுமார் – ஏ.ஆர்.ரகுமான்-ரஜினிகாந்த் கூட்டணியின் மற்றுமொரு சூப்பர்ஹிட்டான இசை வெளியீடாக இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் இந்தக் கூட்டணி இணைந்த ‘‘முத்து, படையப்பா” ஆகிய இரண்டு படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றது.

ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

நவம்பர் 9ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை ‘லிங்கா’ படத்தின் இசையையும், டிரைலரையும் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

Read Previous

கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ ஷுட்டிங் முடிந்தது…

Read Next

இறந்த ரசிகர் குடும்பத்திற்கு விஜய் 3 லட்சம் உதவி…