தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்களோ, அதே அளவிற்கு தமிழ்த் திரையுலகத்திலும் ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படியே இல்லையென்றாலும் வெளியிலாவது தங்களை ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள்.
ஆனால், சிவகார்த்திகேயன் அப்படியில்லை, சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே ரஜினி ரசிகராகவும், ரஜினிக்காக ரசிகர் மன்றம் நடத்தியவராகவும் இருந்திருக்கிறார். 80களில் ரஜினி சூப்பர் ஸ்டாராக ஆன பின் அவருடைய தீவிர ரசிகர்கள் அவர்களுடைய பெயருக்கு முன்னால் ரஜினி என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டுதான் போஸ்டரையே அடிப்பார்கள். அந்த
அப்படிப்பட்ட ஒரு ரசிக நடிகர் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் நாயகனாக நடிப்பது மிகவும் பொருத்தமே. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பொன்ராம் – சிவகார்த்திகேயன் இணையும் படத்திற்கு ‘ரஜினி முருகன்’ என தலைப்பை வைத்திருக்கிறார்கள். திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் முன்னாள் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். ராஜ் கிரண் முக்கியக் கதாபாத்திரத்திலும், சூரி நகைச்சுவைக் கதாபாத்திரத்திலும் நடிக்கப் போகிறார்கள்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஹிட்டாக்கிய இமான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
காரைக்குடி, மதுரை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. கிராமத்து மண் வாசனையுடன் கலகலப்பான குடும்பக் கதையாகவும், காதல் கதையாகவும் இப்படத்தை உருவாக்க இருக்கிறார்கள்.