‘கத்தி’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 நாட்கள் ஆகிறது. இந்த 7 நாளில் உலகம் முழுவதும் இப்படம் வசூலித்த தொகை 70 கோடியைத் தொட்டிருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிறன்று முடிந்த முதல் வார இறுதியில் ‘கத்தி’ படத்தின் மொத்த வசூல் 65 கோடியைத் தொட்டதாகவும் சொல்கிறார்கள். படத்தை வெளிநாடுகளில் வினியோகம் செய் ஐங்கரன் நிறுவனம் அறிவித்தபடி முதல் நாள் வசூல் 26 கோடி ரூபாயாக இருந்தது. அடுத்தடுத்த நான்கு நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் 40 கோடியை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். நேற்று வார முதல் நாள் என்பதால் கலெக்ஷன் கொஞ்சம் குறைந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ஆக, அவர்கள் சொல்லும் கணக்குப்படி ‘கத்தி’ நேற்றுடன் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
யுஎஸ்ஏ-வில் மட்டும் சுமார் 5, 70,000 யுஎஸ் டாலர்கள் வசூலித்துள்ளதாம். அங்கு இதுவரை அதிகமாக வசூலித்த டாப் 10 தமிழ்ப் படங்களின் பட்டியலில் ‘கத்தி’யும் சேர்ந்திருக்கிறது. “எந்திரன், விஸ்வரூபம், சிவாஜி, தசாவதாரம், கோச்சடையான்” ஆகிய படங்களுக்கு அடுத்து ‘கத்தி’யும் இடம் பெற்றுள்ளது.
அங்கு இந்த ஆண்டில் 6,35,000 யுஎஸ் டாலர்கள் வசூலித்து ‘கோச்சடையான்’ முதல் தமிழ்ப் படமாக இருக்கிறது. இந்த சாதனையை ‘கத்தி’ விரைவில் முறியடித்து விடும் என்கிறார்கள்.
பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் ‘கத்தி’ படம் இதற்கு முந்தைய தமிழ்ப் படங்களின் சாதனைகளையும் முறியடித்திருக்கிறதாம்.
இந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாரத்திலோ ‘கத்தி’ திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து விடும் வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.