‘கத்தி’ படத்தை எதிர்த்து புதிய வழக்கு…

Kaththi - Working Stills_00002ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘கத்தி’ திரைப்படத்தின் வசனத்தை எதிர்த்து மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசும் வசனத்தில் ‘2ஜி’ ஊழலைப் பற்றிய வசனம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, ‘கத்தி’ திரைப்படத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக வசனம் இடம் பெற்றுள்ளதை சுட்டிக் காட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மனுதாரர் வழக்கு தொடுத்திருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளைமாக்சில் இடம் பெற்றுள்ள அந்த வசனக் காட்சியில் நாட்டில் நடைபெற்றுள்ள பல ஊழல் சம்பவங்களைப் பற்றிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன. திரையரங்குகளில் அக்காட்சியை ரசிகர்கள் வெகுவாக ரசித்து கைதட்டுவதாகவும் இயக்குனர் முருகதாஸும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெருமைப்பட்டுக் கொண்டார்.

இந்த வழக்கை அடுத்த மாதம் 11ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

Read Previous

‘கத்தி’ – 70 கோடி வசூல்…?

Read Next

கத்தி – விஜய் பேசிய கிளைமாக்ஸ் வசனம்…