‘கத்தி’ படத்தின் கதை விவகாரம் தொடர்பாக மிஞ்சூர் கோபி என்பவர் படத்தின் வெளியீட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து கோபி மேல் முறையீடு செய்திருந்தார். மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று நடைபெற இருந்த சூழ்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான கோபி, தான் செய்த மேல் முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின் கோபி முக்கியத்துவமில்லாத வகையில், உண்மைக்குப் புறம்பாக வழக்கைத் தொடர்ந்துள்ளார் என முருகதாஸ் தரப்பு வாதிட்டதைத் தொடர்ந்து, சட்ட உதவி மையத்திற்கு கோபி ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கு தொடர்பான இந்த விவரத்தை முருகதாஸ் தரப்பினர் மீடியாக்களுக்கு அனுப்பியுள்ளார்கள்.