விஜய் டிவியின் பெருமையாய் விளங்கிய, நேயர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த ‘மகாபாரதம்’ தொடர் நேயர்களின் விருப்பத்திற்கிணங்க மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த இதிகாசத் தொடரை நேயர்கள் இதுவரை கண்டிருக்காத வகையில் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது.
இதுவரை நாம் பல மகாபாரதக் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், நாம் அறிந்திராத பல கதாபாத்திரங்களை நமக்கு எடுத்துக் காட்டியது விஜய் டிவியின் மகாபாரதம்தான்.
இத் தொடரின் முதுல் பாகங்களை சில நேயர்கள் காணத் தவறியிருக்கக் கூடும. அவர்களுக்காகவே விஜய் டிவி எண்ணற்ற நேயர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மீண்டும் ‘மகாபாரதம்’ தொடரை மறுஒளிபரப்பு செய்ய முடிவெடுத்தது.
சத்யவதி – சாந்தனு வாழ்க்கை வரலாற்றில் தொடங்கும் இந்த ‘மகாபாரதம்’, பீஷ்மர், திருதிராஷ்டிர்ர், பாண்டு, குந்தி, திரௌபதி, பாண்டவர்கள், கௌரவர்கள், சகுனி, கர்ணன், வாசுதேவ கிருஷ்ணன் ஆகியோரது கதாபாத்திரங்களை அழகாக சித்தரித்துக் காட்டுகிறது.
வரும் டிசம்பர் 8ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் மட்டும் ஒளிபரப்பாகும் ‘மகாபாரதம்’ தொடரை காணத் தவறாதீர்கள்.