கத்திச் சண்டையில் ஹன்சிகா…

hansika latest photoவிஜய் நடிக்கும் 58வது படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் ஆரம்பமானது.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் காட்சிகளை இயக்குனர் சிம்புதேவன் படமாக்கி வருகிறார்.

ஒரு ஃபேண்டஸி கதையான இந்தப் படத்தில் ஹன்சிகா இளவரசியாக நடித்து வருகிறார். ஏற்கெனவே படத்தின் முதல் ஷெட்டியூலில் கலந்து கொண்டு நடித்த ஹன்சிகா இன்று முதல் இரண்டாவது ஷெட்டியூலில் நடிக்கிறார்.

இதற்காக கத்திச் சண்டைப் பயிற்சியையெல்லாம் ஹன்சிகா எடுத்திருக்கிறாராம். “கொஞ்சம் பயமாகவும் ஆவலுடனும் காத்திருக்கிறேன். இளவரசி எந்த நேரமும் சண்டை போடத் தயார்,” என ஹன்சிகா இன்று நடைபெற உள்ள படப்பிடிப்பைப் பற்றி டிவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

Read Previous

விஜய் டிவியில் மீண்டும் ‘மகாபாரதம்’…

Read Next

அஜித்தை மாற்றிய ‘ஒரு நாள்’…

Most Popular