அஜித், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் இன்று விடிந்த அந்த வினாடியில் யு டியூப் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அஜித்தை மட்டுமே மையப்படுத்தி வெளிவந்துள்ள இந்த முதல் டீசரில் இடம் பெற்றுள்ள பின்னணி வசனங்களை அஜித் ரசிகர்கள் ஆஹா…ஓஹோவென…புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
டீசர் வெளியான 12 மணி நேரத்திற்குள்ளாகவே 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டிருக்கிறார்கள்.
“ஒரு மெல்லிசான கோடு, கோடுக்கு இந்த பக்கம் இருந்தன்னா நல்லவன், அந்த பக்கம் போய்ட்டன்னா ரொம்ப கெட்டவன்.. இந்தப் பக்கமா இல்ல அந்தப் பக்கமான்னு முடிவு பண்ண நேரம் வந்துச்சு வாழ்க்கைல, ஒரு நாள்… வாழ்க்கை என்னை ஒரு தரம் மாத்துச்சு,” என்ற அஜித்தின் குரலில் டீசரின் பின்னணியில் ஒலிக்கும் அந்த வசனத்தில் படத்தின் கதையை ஓரளவிற்கு வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
அந்த ‘ஒரு நாள்’ அஜித்தை எப்படி மாற்றியது என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் எனலாம்…
‘என்னை அறிந்தால்’ டீசரில் அஜித்தின் விதவிதமான தோற்றம் சூப்பராக உள்ளது என அஜித்தின் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.