விஜய் – திரையுலகில் 22 வருடம்…சில தகவல்கள்…

  • vijay 22 years in film industry விஜய் நாயகனாக நடித்த முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’,  டிசம்பர் 4, 1992ம் ஆண்டு வெளியானது…
  • விஜய் குழந்தை நட்சத்திரமாக “வெற்றி, குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி” ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
  • 1998ம் ஆண்டு கலைமாமணி பட்டம் வாங்கினார்.
  • 2007ம் ஆண்டு சத்யபாமா பல்கலைக் கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
  • விஜய் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு பின்னணிப் பாடகராகவும் பல படங்களில் பாடியிருக்கிறார். அவற்றில், “ஐயய்யோ அலமேலு…., தொட்டபெட்ட ரோட்டு மேல…, அகிலா அகிலா…., வாடி…வாடி…, கூகுள் கூகுள்…, வாங்கண்ணா வணக்கங்கண்ணா…, கண்டாங்கி….கண்டாங்கி…, செல்பி புள்ள….” ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டான பாடல்கள்…
  • தமிழக அரசின் விருதுகளை மூன்று முறை வாங்கியிருக்கிறார்.
  • விஜயகாந்துடன் இணைந்து ‘செந்தூரபாண்டி’ படத்திலும், அஜித்துடன் இணைந்து ‘ராஜாவின் பார்வையிலே’ படத்திலும், மோகன்லாலுடன் ‘ஜில்லா’ படத்திலும் இணைந்து நடித்திருக்கிறார்.
  • விஜய் நடித்து 1996 மற்றும் 1997ம் ஆண்டுகளில் தலா ஐந்து படங்கள் வெளிவந்தன.
  • விஜய்யுடன் த்ரிஷா அதிகப் படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.
  • விஜய்க்கு திருப்பு முனையாக அமைந்த படங்கள்…“செந்தூரபாண்டி, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, திருமலை, காவலன்,  துப்பாக்கி’….
  • விஜய் நடித்த ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளன.
  • விஜய் அவருடைய அப்பா இயக்கிய ‘சுக்ரன், பந்தயம்’ ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
  • தமிழைத் தவிர வேறு எந்தப் படத்திலும் விஜய் நடித்ததில்லை.
  • விஜய்யின் 25வது படம் ‘கண்ணுக்குள் நிலவு’, 50வது படம் ‘சுறா’.
  • தமிழ்நாட்டைத் தவிர, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் விஜய்க்கு மிகப் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.
  • விஜய் தற்போது நடிக்கும் 58வது படம் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

Read Previous

அஜித்தை மாற்றிய ‘ஒரு நாள்’…

Read Next

கால்பந்தாட்டம் பற்றிய ‘ஐவராட்டம்’…