“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” ஆகிய படங்களை தயாரித்த லியோ விஷன்ஸ் நிறுவனம், ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படமான ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
அறிமுக இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
‘இன்றைய கால கட்டத்தில் ஒரு படத்திற்கு ‘யு’ சான்றிதழ் பெறுவது மிக முக்கியம், மிகவும் மகிழ்ச்சிகரமானதும் கூட. எங்களுடைய லட்சியமே எல்லா தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான். அருள் நிதி இந்தப் படத்தில் போலீஸ் வேடத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அபாரமான, துடிப்பான நடிப்பை அவர் வெளிபடுத்தி இருக்கிறார். சிங்கம் புலியும் , ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் அறிமுகமான பகவதி பெருமாளும் மிக முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்,” என்கிறார் படத்தின் இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா.
‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ ரசிகர்களை நன்றாகவே சிரிக்க வைக்கும் என படக்குழுவினர் அனைவருமே நம்புகிறார்கள்.