விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடிக்கும் ‘யட்சன்’ படத்தின் நாயகியாக தீபா சன்னிதி நடித்து வருகிறார். இந்தப் படம் வெளிவருவதற்குள் தீபா சன்னிதி தமிழில் நாயகியாக அறிமுகமாகும் ‘எனக்குள் ஒருவன்’ படம் வெளிவந்து விடும்.
கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட மாடல் அழகியான தீபா சன்னதி பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அழகி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். நகைகளை வடிவமைக்கும் கல்வியை படித்துள்ள இவர் கவிதைகளை எழுதுவதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.
கல்லூரியில் படிக்கும் போது கலந்து கொண்ட நாடக அனுபவமும், விளம்பர நிகழ்சிகளில் கலந்து கொண்டு பங்கேற்ற அனுபவமும் தன்னுடைய நடிப்பு பணிக்கு மிகவும் உதுவுகிறது என்கிறார்.
“தமிழ் திரை உலகில் எனக்கென்று தனி இடம் பிடிப்பதே என் லட்சியம். இங்கு இருப்பதைப் போல அருமையான கதைகள், திறமையான இயக்குனர்கள், திரை உலகினருக்கு கிடைக்கும் மதிப்பு ஆகியவை உலகில் வேறு எங்கும் கிடைக்குமா என்பது தெரியாது.
என் முதல் படமான ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளி வரத் தயாராக உள்ளது. இது கன்னடத்தில் ஏற்கனவே நான் நடித்து வெளிவந்த ‘லூசியா’ திரைப்படத்தின் ரீமேக் படமாகும். இந்தப் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறேன்.
எனது அடுத்த படமான ‘யட்சன்’ படத்தில் எனக்கு பிரமாதமான கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். அவர் இருக்கும் போது படப்பிடிப்பு உற்சாகமாக இருக்கும். அவர் ஒரு நல்ல மனித நேயம் மிக்க மனிதராவார்.
என்னுடைய சக நட்சத்திரங்களான சுவாதி மற்றும் கிருஷ்ணா ஆகியோரை மறக்கவே முடியாது. விஷ்ணுவர்தனைப் போல் ஒரு பெரிய இயக்குனரின் இயக்கத்தில் நடிப்பது பெரும் பாக்கியம். ‘யட்சன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இந்தப் படம் மூலம் நானும் தமிழில் ஒரு பெரிய வலம் வருவேன்,’’ என நம்பிக்கையுடன் கூறுகிறார் தீபா சன்னிதி.