V 4 – விருதுகள் 2014…

v 4 awards 2014

எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமி சார்பில் திரைப்பட மக்கள் தொடர்பாளர்களான டைமன்ட்பாபு, சிங்காரவேலு, மௌனம் ரவி, ரியாஸ் அஹமது ஆகிய நால்வரும் இணைந்து வருடந்தோறும் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறார்கள்.

2014 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று (01.01.2015) மாலை 6.30 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

சாதனையாளர் விருது, என்.கே.விஸ்வநாதன், பிலிம் நியூஸ் அனந்தன், ஜூடோ ரத்னம், மித்ர தாஸ் ,தோட்டா தரணி, ’வியட்நாம் வீடு’ சுந்தரம், ரங்கநாயகி, (சங்கர்) கணேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சத்யராஜ், பிரபு, சந்திரசேகர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், பட்டியல் சேகர் மற்றும் கே.ராஜன், அமுதா துரைராஜ், ருக்மாங்கதன், கவிஞர் பிறைசூடன், தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத், நளினி, பாண்டியராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், டி.ஜி.தியாகராஜன், சுஹாசினி மணிரத்தனம், ஆகியோர் கலந்துகொண்டனர்.

2014ம் ஆண்டின் சிறந்த இயக்குனர்களுக்கான விருது பெற்றவர்கள்,

பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்),

எழில் (வெள்ளக்காரதுரை)

பிரபுசாலமன் (கயல்)

ஞான ராஜசேகரன் ( ராமானுஜன்)

பிரவீன்காந்த் (புலிப்பார்வை)

சுசீந்திரன் (ஜீவா)

மகிழ் திருமேணி (மீகாமன்)

கெளரவ் (சிகரம்தொடு)

ராஜபாண்டி (என்னமோ நடக்குது)

முத்துராமலிங்கன் (சினேகாவின் காதலர்கள்)

விஜய் மில்டன் (கோலிசோடா)

வினோத் ( சதுரங்கவேட்டை )

டீகே ( யாமிருக்க பயமேன்)

கார்த்திக் ராஜு (திருடன் போலீஸ்)

வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி)

கிருஷ்ணா( நெடுஞ்சாலை)

இளைய தேவன்( ஞான கிறுக்கன்)

ஆனந்த் சங்கர் (அரிமா நம்பி)

சிறந்த கதைக்கான விருது – பொன் குமரன்( லிங்கா)

சிறந்த இசையமைப்பாளர்கள் – இமான், அனிருத்

சிறந்த வசனம் – பாலாஜி மோகன் (வாயை மூடி பேசவும்)

சிறந்த நகைச்சுவை நடிகர் விருது – நடிகர் விவேக், சூரி

சிறந்த குழந்தை நட்சத்திரம் சத்யதேவ் (புலிப்பார்வை)

சிறந்த திரைக்கதை கார்த்திக்சுப்புராஜ் ( ஜிகர்தண்டா)

சிறந்த ஒளிப்பதிவாளர் – கே.எஸ்.செல்வராஜ்

சிறந்த படத்தொகுப்பாளர் விஜயகுமார் ( அப்புச்சிகிராமம்)

சிறந்த படத்தொகுப்பாளர் தேவா ( மஞ்சப்பை )

சிறந்த ஸ்டன்ட் இயக்குனர் ஸ்டன்ட் சிவா

சிறந்த டிசைனர் மேக்ஸ்

சிறந்த நடன இயக்குனர் காயத்ரி ரகுராம்

சிறந்த புகைப்பட கலைஞர் விருது – சுரேஷ்

சிறந்த பிரிவியு தியேட்டர் –  4 பிரேம்ஸ்

சிறந்த பி.ஆர்.ஓ – கண்ணதாசன், பாரிவள்ளல்,ஈ.வெ.ரா.மோகன்

சிறந்த போட்டோ லேப் – போட்டோ சைன்ஸ்

சிறந்த புதுமுக நடிகர்கள்

சந்தோஷ் ( கதை திரைக்கதை வசனம் இயக்கம்)

சந்திரன் ( கயல்)

கஜேஷ் ( கல்கண்டு)

வீரா ( மொசக்குட்டி)

சிறந்த புதுமுக நடிகை

ஷிவதா ( நெடுஞ்சாலை)

சிறந்த நடிகர்கள்

ஆரி ( நெடுஞ்சாலை)

விமல் (மஞ்சப்பை )

சிபிராஜ்( நாய்கள் ஜாக்கிரதை),

நகுல்( வல்லினம் ),

பாலாஜி( நாய்கள் ஜாக்கிரதை)

யோகி தேவராஜ் ( கயல்),

பிளாரன்ட் பெரைரா (கயல்)

அபினய்( ராமானுஜன் )

சதீஷ் (மான்கராத்தே)

ஜேக்கப் (கயல்)

சிறந்த நடிகை  – தன்ஷிகா, நந்திதா

சஞ்சனாசிங் ( குணச்சித்திர நடிகை )

சிறந்த தயாரிப்பாளர் – மனோபாலா ( சதுரங்கவேட்டை)

போன்ற விருதுகள் வழங்கப்பட்டது.

விழாவில் லஷ்மன் ஸ்ருதி குழுவினரின் இசை நிகழ்ச்சியும், நடன இயக்குனர் காயத்ரிரகுராம் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Read Previous

பொங்கல் ரிலீஸ் – விலகிய படங்கள் மீண்டும் வருமா…?

Read Next

தீபா சன்னிதியின் லட்சியம்…