1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், எழில் இயக்கத்தில் உருவான படம் ‘வெள்ளக்கார துரை’.
விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடிப்பில் உருவான இந்தப் படம் கிறிஸ்துமஸ் அன்று 200 திரையரங்குளில் வெளியாகி வெற்றி பெற்றது. மக்களின் அமோக வரவேற்பு காரணமாக இப்போது கூடுதலாக 100 திரையரங்குகளில் இப்படம் திரையிடப் பட்டுள்ளது.
கலகலப்பான நகைச்சுவைப் படமாக அமைந்துள்ள இப்படம் தமிழகம் முழுவதும், குறிப்பாக பி அன்ட் சி சென்டர்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
தான் தயாரித்த முதல் படமான ‘வெள்ளக்கார துரை’ படம் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அன்புசெழியன் தனது கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக இன்னும் நிறைய படங்களைத் தயாரிக்கப் போகிறேன் என்று அறிவித்துள்ளார்.