விஜய் சேதுபதியின் புதிய படம்…

merku thodarchi malai posterவிஜய் சேதுபதி அவருடைய சொந்தப் பட நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மேலும் ஒரு புதிய படம் ஒன்றைத் தயாரிக்க இருக்கிறார்.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத் திரைப்படத்தை லெனின் பாரதி இயக்குகிறார், இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிதான்  நாயகனாக நடிக்க உள்ளாரா என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

விஜய் சேதுபதி  அவருடைய பட நிறுவனத்தின் மூலம் ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை ஏற்கெனவே தயாரித்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் உருவாகம் இரண்டாவது படம் இது.

படத்தின் தலைப்பே இது எந்தக் களத்தைக் கொண்ட படமாக இருக்கும் என்பதை ஓரளவிற்கு புரிய வைத்துள்ளது. படத்தின் முதல் பார்வையில் எந்த நடிகரின் புகைப்படமும் இடம் பெவில்லை. விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தால் கண்டிப்பாக அவர் புகைப்படம் இடம் பெற்றிருக்கும்.

இப்படம் பற்றிய அடுத்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

கூடுதல் திரையரங்குகளில் ‘வெள்ளக்கார துரை’…

Read Next

25வது நாளில் ‘லிங்கா’…