அஜித்தின் ‘Sorry – Thanks’ தத்துவம்…

yennai arindhaal stunt silva news“மங்காத்தா, வீரம்,” தற்போது ‘என்னை அறிந்தால்’ என வரிசையாய் அஜித் படத்தின் சண்டைக் காட்சிகளை ‘ஸ்டன்ட்’ சில்வா வடிவமைத்து வருகிறார்.

அஜித்துடன் தொடர்ச்சியாக பணி செய்வதைப் பற்றி பெருமையுடன் சொல்கிறார் சில்வா.

இயக்குனர் வெங்கட்பிரபு தான் என்னை அஜித் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘மங்காத்தா’வின் சண்டைக் காட்சிகள் மிகவும் பேசப்பட்டது. சிவா சார் கூட முன்னரே பணி புரிந்திருந்ததால் ‘வீரம்’ கிடைத்தது. அதில் ரயில் சண்டைக்காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் அந்த கூட்டணியை தொடர்ந்துள்ளார் கௌதம் சார். அவருடனும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா , நடுநிசி நாய்கள்’ என நான்கு படங்கள் வேலை செய்துள்ளேன். அஜித் சார்க்கும் என்னை பிடிக்கும், அதனால்தான் அவருடைய படங்களில் தொடர்ந்த இடம் பெறுகிறேன் என நினைக்கிறேன்.

‘என்னை அறிந்தால்’ படத்தில் எல்லா ஸ்டண்ட்டையும் ‘Live’ஆ செய்திருக்கிறோம். சில விஷயங்களை படம் ரிலீஸ் ஆதற்கு முன்னாடி எப்படி சொல்வது. அஜித் சார் எதாவது ஒரு ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்பி விட்டுவிடுவார். நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இந்த படத்தில் ‘தல’ தன் தலையை வைத்து உண்மையான கண்ணாடியை உடைத்திருக்கிறார்.

எனக்கு தனியாக எந்த பெயரும் வாங்க வேண்டும் என்று ஆசையில்லை. கதையை மீறாமல், கதாபாத்திரத்தின் எல்லைகளை மீறாமல் சண்டை காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள் தமிழ் சினிமாவில் பணி புரிவது ஆரோக்கியமான விஷயம். அவர்களது ‘Work Style’ வேற மாதிரி இருக்கும். முன்னரே அனைத்தையும் திட்டமிட்டு வேலை செய்வார்கள் . எல்லா வகையிலும் பாதுகாப்பு வழிமுறைகளை ஆய்வு செய்து வேலையை தொடங்குவார்கள்.

எப்படி ‘On-Spot’ல திட்டமிடுகிறீர்கள் என்று அவர்கள் நம்மைப் பார்த்து கேட்பதும் உண்டு. ஹாலிவுட், பாலிவுட் என்று நமது ஸ்டண்ட் கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் வேலை செய்து வருகிறார்கள்.

‘என்னை அறிந்தால்’ படத்துக்காக சென்னைல நிறையா ஷூட் பண்ணினோம். எல்லாரிடமும் அக்கறையா இருப்பார். சண்டை காட்சிகளின் போது ஸ்பாட்டில் அனைவரது பாதுகாப்பைப் பற்றி பெரிதும் கவனம் கொள்வார். சிறு தவறு செய்தாலும் பெரியவர், சிறியவர் என்று பாராமல் உடனே ‘Sorry’ கேட்டு விடுவார். Sorry மற்றும் Thanks மனிதனின் Ego வை குறைத்து விடும் என்று அடிக்கடி கூறுவார். அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவரது விடா முயற்சி என்னை பெரிதும் மலைக்க வைத்த ஒன்று, எதையும் முடியாது என்று கூறமாட்டார்,” என்று அஜித் பற்றி பெருமையாகக் கூறுகிறார் சில்வா.

Read Previous

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்…

Read Next

‘எந்திரன்’ வசூலை மிஞ்சும் ‘ஐ’ வசூல்…

Most Popular